கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மன்சூர் அலிகான், பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
அந்த வகையில், பேரூர் பகுதியில் ஆதரவு சேகரித்துக் கொண்டிருந்த மன்சூர் அலிகான், திடீரென அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், பேண்ட் வாத்தியத்திற்கு நடனமாடியது மட்டுமின்றி அங்கிருந்த இசைக் கலைஞர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தார். அவருடன் மணமக்களும், விருந்தினர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த மன்சூர் அலிகான், வெற்றிபெற்றதும் அனைத்துக் குறைகளும் உடனடியாகத் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: இது ஜனநாயக இந்தியாவே அல்ல!