கோயம்புத்தூர், மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் காதலித்தபோது எடுத்த நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் பறிக்க கிருஷ்ணகுமார் முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், குனியமுத்தூர் காவல் துறையினர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டம், கொலை மிரட்டல், ஆபாசப் பேச்சு, அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆன்லைனில் நடக்கும் மாணவர் சேர்க்கை... கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகம்!