ETV Bharat / state

காவல் துறை வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாட்டிக்கொண்ட கோவை இளைஞர்!

கோவை: ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

man sent scandal video to police
man sent scandal video to police
author img

By

Published : Jun 22, 2020, 5:19 AM IST

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, ஒரு எண்ணிலிருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த காவல் துறையினர் அதிர்ந்துபோயுள்ளனர். ஏனெனில், அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னை நிர்வாணமாகப் படம்பிடித்து அனுப்பியிருந்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதும், அவர் சரவணம்பட்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்ததும் தெரியவந்தது. பிரேம்குமாரின் எண்ணை வைத்து அவரது வீட்டு முகவரியைக் கண்டறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்து அவரைக் கைதுசெய்து, கையோடு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வீடியோவை வேறு யாருக்கோ அனுப்ப நினைத்து, தவறுதலாக ராமநாதபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வசமாக மாட்டிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த காப்பகம் நடத்திவந்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.