தடாகம் பகுதியில், நேற்று (ஜன.18) இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாகத் தடாகம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாங்கரை பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் கேரள மாநிலம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பதும், கோவையில் தங்கி பணிபுரிந்து வந்த அவர், வாரம் ஒருமுறை கேரளாவிற்குச் சென்று அங்கிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள், கூலி வேலை செய்பவர்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிமிடருந்து 1,200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.