ETV Bharat / state

அரசு மருத்துவரை தாக்கிய விவகாரத்தில் ஒருவர் கைது - பரபரப்பு சிசிடிவி காட்சி - கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துரை தாக்கிய விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவரை தாக்கிய விவகாரத்தில் ஒருவர் கைது

author img

By

Published : Sep 28, 2021, 7:54 PM IST

கோயம்புத்தூர்: உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சந்திரகலான். கோவை செஞ்சேரிமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று (செப்.27) பணிமுடிந்து திரும்பும்போது தனது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் குழந்தையை முன்னால் அமரவைத்தபடி செல்போன் பேசி கடந்து சென்றுள்ளார்.

இதனை கவனித்த மருத்துவர் கணேஷ், அந்த நபரை அழைத்து அஜாக்கிரதையாக வாகனம் இயக்காதீர்கள், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் என அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட அந்த நபர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அரசு மருத்துவரை தாக்கிய விவகாரத்தில் ஒருவர் கைது

இதை பார்த்த அங்கிருந்த அடையாளம் தெரியாத நபரின் நண்பர்கள் நடந்ததை விசாரிக்காமல் மருத்துவரை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

காயமடைந்த மருத்துவர் கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மருத்துவரை தாக்கியது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பது தெரியவந்தது. பாஸ்கரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பாஜகவின் வலையில் சிக்காதது விடுதலைச் சிறுத்தைகள்தான்' - தொல்.திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.