ETV Bharat / state

மக்னா யானையை விரட்டுங்க ப்ளீஸ்.. போராட்டத்தில் குதித்த பொள்ளாச்சி மக்கள்!

பொள்ளாச்சி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்தியும் மக்களை அச்சுறுத்தியும் வரும் மக்னா காட்டு யானையினைப் பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர், வனத்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தும் மக்னா காட்டு யானை! மக்கள் பீதி

author img

By

Published : May 14, 2023, 3:09 PM IST

விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தும் மக்னா காட்டு யானை! மக்கள் பீதி

கோயம்புத்தூர்: தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனச்சரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர், 54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளப்பதி பகுதியில், மக்னா யானை முகாமிட்டு, கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களைச் சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனையடுத்து யானை, விவசாயத் தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்ஸ்லிப் யானைகள் வளர்ப்பு முகாமிலிருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு அதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால், வனத்துறைக்குப் போக்கு காட்டிய மக்னா யானை, இரவு நேரத்தில் வெளியேறி, மூன்று கும்கி யானைகளுடன் நட்பாகப் பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றித் திரிந்தது. இதனால், அப்பகுதியிலிருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கே திருப்பி அனுப்பிவைத்தனர்.

ஆனால், மக்னா யானை தற்போது மீண்டும் தொடர்ந்து வனப்பகுதியை விட்டு, வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்தியும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், வனத்துறை அலட்சியத்தைக் கண்டித்து சரளபதி, பொதுமக்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன கோஷங்களும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும் வனத்துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டப்போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்.. ராசிபுரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.