தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரைகள் அனைத்து பகுதிகளிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோயிலில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ராதாமணி, ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பரப்புரை மேற்கொண்டார்.
அதில், ‘2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றதுபோல் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும், அதிமுக வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெறுவார்கள். ஏற்கனவே, பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குடியுரிமைச் சட்டம் என்பது நமது நாட்டில் உள்ள சிறுபான்மையினரை எந்த வகையிலும் பாதிக்காது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த மாணவர்கள்