கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இனிப்பு வகைகள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. அந்தப் இடத்தின் அருகில் அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் அறையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது.
தீ வேகமாக எரிவதைப் பார்த்த ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா வேட்டை 3.0: விழுப்புரத்தில் 2 பேர் கைது