ETV Bharat / state

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம்! - கோவை மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

கோவை: சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், வீட்டு மனை வேண்டியும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

kovai mather sangam protest for gas rate

author img

By

Published : Dec 21, 2020, 6:35 PM IST

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் இலவச வீட்டு மனை ஒதுக்கி தர வேண்டியும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், மத்திய அரசு உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் இலவச வீடு ஒதுக்கி தருமாறு 300 மனுக்களை அளித்தனர்.

200க்கும் மேற்பட்ட மகளிர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:

தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.