கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலையில் இவரது தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்திருந்த நான்கு ஆடுகளையும் ஒரு கன்று குட்டியையும் கடித்துக் கொன்றது.
தகவலறிந்த வனத் துறையினர் உடனடியாக விரைந்துவந்து இதுபற்றி விசாரித்து அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராவை பொருத்தினர். இந்நிலையில் மீண்டும் புலி அங்கு வந்ததை உறுதிப்படுத்திய வனத் துறையினர் அதைப் பிடிக்க இரும்பாலான கூண்டு ஒன்றை வைத்தனர்.
இறந்த ஆட்டின் இறைச்சியை அந்தக் கூண்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதாகவும் கூண்டில் புலி பிடிபட்டவுடன் மேல் அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வைத்திருந்த தானியங்கி கேமராவில் புலி வந்து இறைச்சியை உண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுோங்க:
பொள்ளாச்சியில் விவசாயிகளை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க கூண்டு