ETV Bharat / state

கறுப்பர் கூட்டத்திற்கு பாஜக மாநில இளைஞர் அணி எதிர்ப்பு!

கோவை: பாஜக மாநில இளைஞர் அணியைச் சேர்ந்த பெண்கள் கந்தவேலை கையில் வரைந்து கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள்

author img

By

Published : Jul 28, 2020, 6:48 PM IST

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்து வீடியோ பதிவேற்றிய கறுப்பர் கூட்டம் சுரேந்தர் உள்பட நான்கு பேர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் காட்சிப் பதிவு வெளியிட்ட இந்து தமிழர் பேரவையைச் சேர்ந்த கோபால் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது கறுப்பர் கூட்டம் சுரேந்தர், இந்து தமிழர் பேரவையின் கோபால் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள்
கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கோவையில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் கந்தவேலின் படத்தை சாலையில் வரைந்து சென்றனர்.
அதற்காக பலரது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் சுமார் 30 அடி உயர கந்தவேலை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து நஞ்சுண்டாபுரம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 28) இடையர்பாளையம் பகுதியில் பாஜக மாநில இளைஞர் அணி செயலர் பிரீத்தி லட்சுமி தலைமையில் பெண்கள் தங்களது கைகளில் கந்தவேலை வரைந்து கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் 'வெற்றி வேல் வீர வேல்' என்று பூக்கோலம் போட்டு கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.