பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அங்கலக்குறிச்சி வனப்பகுதியில் காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சக்திவாய்ந்த கால பைரவரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் மானசா அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மாதுளை, ஆப்பிள், திராட்சை என பல்வேறு வகை 300 கிலோ பழங்களைக் கொண்டு சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும், 120 கிலோ பழங்களால் மாலை கட்டி அம்மனுக்கு சாத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!