ETV Bharat / state

தனியார் கட்டுமான நிறுவனத்தில் பறிமுதலான ஆவணங்களை எஸ்பிஐ வங்கியில் ஒப்படைப்பு! - private construction company

Coimbatore IT Raid: கோவை தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனை நடத்தி வந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கோவை தலைமை பாரத ஸ்டேட் வங்கி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கோவை
கோவை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 5:04 PM IST

வருமான வரித்துறை

கோயம்புத்தூர்: கோவை அருகே வடவள்ளியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தீவிர சோதனை செய்தனர். இதேபோல், இந்த கட்டுமான நிறுவனத்தில் இயக்குநர்கள் வீடுகளில் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: "சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!

இவ்வாறு தொடர்ந்து மூன்று நாளாக சோதனை நடத்தி வந்த நிலையில், கணக்கில் காட்டப்படாத பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தின் கருவூலத்தில், ஏழு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புடன் ஒப்படைத்தனர்.

மேலும், இதில் எவ்வளவு பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளது என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: Covai NIA Raid ஏன் நடந்தது..? பெண் கவுன்சிலரின் கணவர் அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.