ETV Bharat / state

இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத்தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! - Suicide Attempt

இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன சுவாமிகள் தனது குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயற்சி ஈடுபட்ட நிலையில், அவரது தாய் உயிரிழந்தார்.

இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

author img

By

Published : Aug 4, 2022, 7:53 AM IST

கோயம்புத்தூர்: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, செங்கல்பட்டில் சொந்தமாக இடம் உள்ளது. ஆனால் இந்த இடத்தில் நிலப்பிரச்னை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக கோயம்புத்தூரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நில பிரச்சனையை சரி செய்து தருவதாகக் கூறிய பிரசன்ன சுவாமிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 25,59,000 ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும் மாங்கல்ய பூஜை செய்தால் விரைவில் பிரச்சனை தீரும் என கூறியதால், தொழிலதிபர் கருப்பையா தனது மனைவியின் 15 சவரன் தங்க நகையையும் கொடுத்துள்ளார்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

ஆனால் நிலப்பிரச்னையை தீர்த்து வைக்காததால், இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் அளித்தார். இதனையடுத்து பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரபிரசாத் மற்றும் பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தன் மீதும், தன் மனைவி மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததால் பிரசன்ன சுவாமிகள், தனது வீட்டில் மனைவி அஸ்வினி, மகள் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் எங்கள் தற்கொலைக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கருப்பையாவும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

இது தொடர்பாக வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனிடையே நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது நான்கு பேரும் மயங்கிய நிலையில் இருந்ததால், அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே தாயார் கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எஞ்சிய மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்- இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.