கோயம்புத்தூர்: கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி தம்பதியினரின் மகன் முத்து, 8 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேம்ரூன் நாட்டில் தங்கி, ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அதே நிறுவனத்தில் அக்கவுன்டன்ட்டாகப் பணியாற்றி வந்த 'எம்மா எஞ்சிமா மொசொக்கே' என்பவரின் மகளான 'வால்மி இனாங்கா மொசொக்கேக்கும்' இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க, உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்ததையடுத்து, இன்று (ஏப். 29) கோயம்புத்தூர் துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மணமகன் முத்துவிற்கும், மணமகள் வால்மி இனாங்கோ மொசொக்கேக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகளை பட்டுப்புடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின்கீழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து முத்து இந்து முறைப்படி, மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். மேலும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஓப்பனாக பேசவேண்டும்' பெற்றோருக்கு ஓவியா அட்வைஸ்