ETV Bharat / state

கோவையிலும் வருமான வரித்துறை சோதனை! திமுக பிரமுகர் வீடு உள்பட 5 இடங்களில் தொடரும் சோதனை! - today latest news

EV Velu IT Raid in Covai : கோவையில் அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

EV Velu IT Raid
கோவையில் திமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 12:43 PM IST

Updated : Nov 3, 2023, 12:58 PM IST

கோவையில் திமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

கோயம்புத்தூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் திருவண்ணாமலையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (நவ. 3) காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கோவை ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 3 கார்களில் வந்துள்ள 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி இல்லத்தில் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருவதாகவும், மீனா ஜெயக்குமார் மற்றும் எஸ்.எம்.சாமி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் என்பதுடன், ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்புடையவர்களாக இருந்து வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

மீனா ஜெயக்குமாரின் கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் உட்பட வேறு சில தொழில்களிலும் தொடர்புடையவர் என்பதால் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல சவுரிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு கார்களில் வந்துள்ள அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் இரு தளங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கோவை பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற இயற்கை உணவு மற்றும் கட்டுமான நிறுவனத்தில் 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக பிரமுகர் மீனா ஜெயகுமாரின் மகன் ஸ்ரீராம் இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள நிலையில் இந்த நிறுவனத்திலும் காலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது. கோவையில் மட்டுமே அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரி சோதனை!

Last Updated : Nov 3, 2023, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.