ETV Bharat / state

செந்தில் பாலாஜி திறந்து வைத்த மறுவாழ்வு மையத்தில் ரெய்டு.. 2வது நாளாக தொடரும் சோதனை! - கோயம்புத்தூர் செய்திகள்

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

it raid
செந்தில் பாலாஜி
author img

By

Published : May 27, 2023, 2:04 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரிமான வரித்துறை சோதனை 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. முன் அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரது மனைவி கிருபாலினி கார்த்திகேயன், தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், தொழில் நெருக்கடி காரணமாக செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையை ஒட்டி அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று வருமான வரி சோதனை துவங்கியவுடன் தகவல் அறிந்த திமுகவினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெம்பனூர் பகுதியில் உள்ள காயத்ரி என்பவருக்கு சொந்தமான நீலாவதி நினைவு அபாஷா போதை மறுவாழ்வு இல்லத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வருமான வரித்துறை துணை ஆணையர் பச்சையப்பன் தலைமையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இல்லம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளரான அரவிந்த் என்பவரது மனைவி காய்த்ரிக்கு சொந்தமானது ஆகும். இந்த மறுவாழ்வு இல்லம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பந்தயசாலை, பீளமேடு பகுதிகளில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு.. முதல் நாளின் முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.