ETV Bharat / state

பெற்றோர் மீது கோபம்... கிணற்றில் குதித்த மகள்; காப்பாற்ற விழுந்த அண்ணன் - பறிபோன இரு உயிர்கள்!

கோவை: பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்து கிணற்றில் குதித்த தங்கையைக் காப்பாற்ற விழுந்த அண்ணனும் தங்கையுடன் சேர்ந்து உயிரை விட்டிருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் சண்டையில் பிள்ளைகள் தற்கொலை
in-kovai-parents-brawl-leads-to-daughter-and-son-suicide
author img

By

Published : Dec 22, 2019, 10:00 PM IST

கோவை மதுக்கரை பகுதியில் வசித்துவரும் முத்துசுவாமி (45) - வேலுமணி (43) தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். தோட்ட வேலை செய்து வரும் முத்துசுவாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை முற்றியுள்ளது. அதை நிறுத்துமாறு மகள் சித்ரா (17) பலமுறை கூறியும், இருவரும் பொருட்படுத்தாமல் தங்களின் சண்டையை தொடர்ந்தவாறு இருந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சித்ரா, வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது அண்ணன் அருண்குமாரும் (25) கிணற்றில் குதித்திருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சித்ரா, அருண்குமார் ஆகியோரது சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்குவாரியில் குதித்த இளைஞர் சடலமாக மீட்பு!

Intro:பெற்றோரின் சண்டையால் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள். காப்பாற்ற சென்ற அண்ணனும் இறப்பு.Body:பெற்றோரின் சண்டையால் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள் காப்பாற்ற சென்ற அண்ணனும் இறப்பு.

கோவை மதுக்கரை பகுதியில் வசிக்கும் முத்துசுவாமி(45) அவர் மனைவி வேலுமணி(43). முத்துசாமி தோட்ட வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக தெரிய படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சண்டை முற்றிய நிலையில் அதை தடுத்து நிறுத்தக் கோரி அவர்களது மகள் சித்ரா(17) கேட்டுக்கொண்டுள்ளார் ஆனால் அதை பொருட்படுத்தாமல் சண்டை முற்றிய நிலையில் மனமுடைந்து சித்ரா அவர்கள் வசிக்கும் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். சித்ராவை காப்பாற்ற சென்ற அவரது அண்ணன் அருண்குமார்(25) அவரும் கிணற்றில் குதித்துள்ளார் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றிலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இன்று அதிகாலை சுமார் 12:30 மணி அளவில் சித்ராவின் சடலத்தை எடுத்துள்ளனர். அருண்குமார் சடலம் 3 மணிக்கு எடுத்துள்ளனர். அதன்பின் இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு கோவை மருத்துவமனைக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.