ETV Bharat / state

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்; முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதி மூடல் - Mangaluru

கோவையில் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படும் முகமது ஷாரிக் தங்கி இருந்த தங்கும் விடுதி தற்காலிகமாக பூட்டப்பட்டது.

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்; முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதி மூடல்

author img

By

Published : Nov 21, 2022, 10:02 PM IST

கோயம்புத்தூர்: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படும் முகமது ஷாரிக் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் ஆகியோர் கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் காந்திபுரம் பகுதியில் உள்ள ’MMV- மதி மகிழ் வியன் அகம்' என்ற தங்கும் விடுதியில் தங்கி இருந்தது, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில், பக்கத்து அறையில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் தங்கி இருந்தார். இவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுரேந்திரன் தனது ஆதார் ஆவணங்களைப் பயன்படுத்தி முகமது ஷாரிக்கிற்கு சிம் கார்டு வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் தங்கியிருந்த விடுதியில் நேற்று மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திச் சென்றனர். இந்நிலையில் இன்று விடுதியை பூட்டிவிட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த நபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பின்னர் விடுதிக்கு பூட்டு போடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விடுதியில் மேலாளர் மற்றும் உரிமையாளர் காமராஜ் ஆகியோர் காட்டூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராக இருக்கின்றனர். இதனிடையே மங்களூரு கார் வெடிப்பை நிகழ்த்திய முகமது ஷாரிக், கோவையில் 3 நாட்கள், மதுரையில் 2 நாட்கள், கன்னியாகுமரியில் 1 நாள், கேரள மாநிலம் ஆலுவாவில் 2 நாட்கள் தங்கி இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் காந்திபுரம் பகுதியில் 3 நாட்கள் தங்கி இருந்த பொழுது ஷாரிக் யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உதகை வந்துள்ள மங்களூரு தனிப்படை காவல்துறையினர் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனை, மங்களூர் அழைத்துச்சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்; முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதி மூடல்

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பிற்கும், கோவை கார் குண்டு வெடிப்பிற்கும் தொடர்புகள் இருக்கின்றதா? இருவரையும் இயக்குவது ஒரே குழுவைச் சேர்ந்தவர்களா எனும் கோணங்களில் காவல் துறையினர், அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவ இடத்தில் என்ஐஏ விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.