ETV Bharat / state

இந்து - இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடிய ’மயிலந்தீபாவளி’

பொள்ளாச்சி அருகே தீபாவளிக்கு மறுநாளான நேற்று(அக்.25) இந்து - இஸ்லாமியர் சேர்ந்து கொண்டாடும் மயிலந்தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்து - இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடும் ’மயிலந்தீபாவளி’...!

author img

By

Published : Oct 26, 2022, 8:22 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்து - இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடும் ’மயிலந்தீபாவளி’...!

இந்த நாளை 'மயிலந்தீபாவளி' என்று அழைக்கிறார்கள். இந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் உறவினர்கள் போல் பழகி வருவதால் ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா முழுவதும் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் அதவாது நேற்று 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மயிலந்தீபாவளியை கொண்டாடினார்கள்.

வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது. வடசித்தூர் பகுதியில் வசித்து வரும் இந்து, முஸ்லிம் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் மயிலந்தீபாவளியை கொண்டாடி மத்தாப்பூ, பட்டாசு, சரவெடி வெடித்து மகிழ்வார்கள்.

வடசித்தூர் கிராமத்தில் திருமணமாகி சென்ற பெண்கள் புகுந்த வீட்டில் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு தாய் வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வந்து இருந்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த மயிலந்தீபாவளியில் அரசியல் கட்சியினர், திருவிழா கமிட்டி இல்லாமல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.