கோயம்புத்தூர்: தடாகம் முத்தண்ணன் குளத்தில் இருந்த பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் இடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அங்காளம்மன் படத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து, தடாகம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், "சீர்மிகு நகரம் திட்டத்தை தாங்கள் வரவேற்கிறோம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்காகப் பழமைவாய்ந்த கோயிலை இடிக்கக் கூடாது. இடிக்கப்பட்ட கோயிலை சிறிய அளவிலாவது அமைத்துத் தர வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'பாபா... பாபா...' - வேனின் பின்னே ஓடிய மக்களால் பரபரப்பு