கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை வரை ஸ்ரீ முருகன் 3B என்ற தனியார் பேருந்து இயக்கப்படும். இன்று வழக்கம்போல் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. ரமேஷ் என்ற ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம், கார் மீது மோதி, சாலை அருகில் இருந்த பெட்ரோல் சேமிப்பு நிலையத்திற்குள் புகுந்து நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த பொள்ளாச்சி முத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (72) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர், நடத்துநரை கைதுசெய்துள்ள போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் 8.5 ஏக்கர் நிலம் அபேஸ்- ஒருவர் கைது!