கோவை மாநகர காவல் துறையின் சமூகவலைத்தளப் பக்கங்களில் விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பதிவிடப்படுவது வழக்கம். இதனை போலீசார் நிர்வகித்துவருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. அந்தப் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பதிவிடப்பட்டன. இதனை நேற்று காலை அறிந்துகொண்ட கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக அதை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். அதன்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின் ட்விட்டர் பக்கத்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மீட்டனர்.
இந்த ஹேக் செய்யப்பட்ட விவகாரமானது 2 தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம் காவல்துறை ஹேக்கர்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ பதிவை வெளியிட்டு இருந்த நிலையில் காவல்துறையின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், இந்த செயலில் வெளிநாட்டு நபர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மின் கட்டண மோசடி... டிஜிபி எச்சரிக்கை...