ETV Bharat / state

கின்னஸ் சாதனை - 4.47 நிமிடங்கள் விருச்சிகாசனம் செய்த சிறுமி

விருச்சிகாசனத்தைத் தொடர்ச்சியாக, நான்கு நிமிடங்கள் 47 விநாடிகள் செய்து கோயம்புத்தூரைச் சேர்ந்த சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.

author img

By

Published : Sep 19, 2021, 9:54 PM IST

கோயம்புத்தூர்: நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்ஜெயன்- ஜெயந்தி தம்பதியின் மகள் நேகா. இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.

யோகாசனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விருச்சிகாசனத்தில் உலக சாதனை புரியும் முயற்சியில், கடந்த ஆறு மாதங்களாக சிறப்புப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

சாதனையை முறியடித்த சிறுமி

இதனைத்தொடர்ந்து சிறுமி நேகாபாரதியின் கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இன்று (செப்.19) கோயம்புத்தூர் நீலம்பூர் பகுதியில் நடைபெற்றது.

இதில் நேகா யோகாசனத்தில், மிக சிரமமான விருச்சிகாசனத்தைத் தொடர்ந்து, நான்கு நிமிடம் 47 விநாடிகள் செய்து சாதனை செய்தார்.

முன்னதாக விருச்சிகாசனத்தில் இரண்டு நிமிடம் பதினான்கு நொடிகள் சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்தச் சாதனையை செய்துள்ளார். இவரது இம்முயற்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: கிஷ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம்; கோயிலுக்கு சொந்தமானது - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.