ETV Bharat / state

சிஏஏ போராட்டங்களை நடத்துகின்றவர்களை அரசு கண்காணித்துக் கொண்டிருக்கிறது - முதலமைச்சர்

author img

By

Published : Feb 24, 2020, 4:51 PM IST

கோவை : இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு யார் போராட்டம் நடத்துகின்றனர் என்பதை தமிழ்நாடு அரசு கண்காணித்துக் கொண்டு தானிருக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TN Government is monitoring who is conducting the CAA protests CM Edappadi Palaniswami
சிஏஏ போராட்டங்களை யார் நடத்துகின்றனர் என்பதை அரசு கண்காணித்துக் கொண்டிருக்கிறது!

சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் தொடர்பாக நானும், வருவாய்த் துறை அமைச்சரும் சட்டப்பேரவையில் தெளிவாக கூறியுள்ளோம். இந்த அரசாங்கம் எப்போதுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தரும் அரசாகவே இருக்கும், இஸ்லாமிய மக்கள் சிஏஏவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2001 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்.பி.ஆர் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், அது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2010 ஆம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் தான் கணக்கெடுப்பு தொடங்கியது. ஆனால் இன்று ஆட்சிக்கு இடையூறு செய்ய சிறுபான்மையினரிடத்தில் அச்சம் ஏற்படுத்த இத்தகைய தவறான செயலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். அதேபோல் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் சிஏஏ குறித்து இங்குள்ள இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள ஆதாரத்தைக் கொடுக்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் எதிர்கட்சியினர் சிறுபான்மையினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த இதனை பூதாகரமாக்கி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு யார் போராட்டம் நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும், அரசும் அதனை கண்காணித்துக் கொண்டு தானிருக்கிறது.

குடிமராமத்து பணி போன்ற பல திட்டங்களால் விவசாயிகளிடத்தில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு இந்த அரசுக்கு ஏற்பட்டு இருப்பதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கான திட்டங்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதை ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை, எதிர்கட்சியினராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்திவரும் நிலையில் அந்நாளை சிறப்பிக்கும் வகையில் பிப்ரவரி 24 ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : ட்ரம்ப் வருகை - அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.