ETV Bharat / state

ஃபுட்பால் விளையாட்டு, மவுத் ஆர்கன் வாசிப்பு, 'பேபி கட்' ஹேர் ஸ்டைல்: குறும்புக்காரி கோமதி!

author img

By

Published : Dec 18, 2019, 3:02 PM IST

கோவை: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானை முகாமில் ஃபுட்பால் விளையாடுவதும், மவுத் ஆர்கன் வாசிப்பதும் என படு சுட்டியாக வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கோமதி யானை.

gomathi
gomathi

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத் துறை சார்பில் கோயில் யானைகள், மடத்தில் உள்ள யானைகளுக்கான 12ஆவது புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்றுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை முகாமில் பங்கேற்கும் யானைகள், சக யானைகளைப் பார்த்து உற்சாகம் அடைகின்றன.

முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் சிலம்பு சுற்றுவது, மவுத் ஆர்கன் வாசிப்பது என பல்வேறு வித்தைகளை செய்து வருகிறது. இதில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் யானை கோமதி, முகாமுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

ஃபுட் பால் விளையாடும் கோமதி

25 வயதான கோமதி புட்பால் விளையாடுவது, மவுத் ஆர்கன் வாசிப்பது என படு சுட்டியாக உள்ளது. மோமதியின் நடைபாவனை அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து கோமதி யானையின் பாகன் சனல் குமார் கூறுகையில், ' இந்த கோமதி யானையை ஊர் மக்கள் அனைவரும் நடை அழகி என அன்பாக அழைப்பார்கள். மவுத் ஆர்கன் வாசிப்பது, ஃபுட்பால் விளையாடுவது போன்றவற்றை இயல்பாக கற்றுக்கொண்டது. இதுவரை யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை' என்று கோமதியின் சேட்டைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

குறும்புக்காரி கோமதியின் சுட்டித்தனங்கள்

பேபி கட் ஹேர் ஸ்டைல் கோமதி

பேபி கட் ஹேர் ஸ்டைலில் காட்சியளிக்கும் கோமதி யானைக்கு தலைமுடி மிகவும் நீளமாக இருப்பதால் பொது மக்களை எளிதில் கவர்ந்து விடுகிறது. கோமதி யானை காட்டு யானைகளை விரட்டுவதில் பிரபலமான 'கும்கி' யானை கலீமின் மகளாகும். 1994ஆம் ஆண்டு கோவை மாவட்டம் 'டாப் ஸ்லிப்' யானைகள் முகாமில் பிறந்த கோமதி யானை, தன் தந்தையைப் போன்று சுட்டித்தனத்திலும், அன்பிலும் சிறு குழந்தையாகவே வளர்ந்து வருகிறது.

gomathi
’பேபி கட்’ ஹேர் ஸ்டைலில் கலக்கும் கோமதி

1996ஆம் ஆண்டு சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோமதி யானையை கடந்த 15 வருடமாக பாகன் சனல் குமார் ஒரு குழந்தையைப் போன்றே கவனித்து வருகிறார்.

சுட்டித்தனத்தாலும், திறமையாலும், நடை அழகாலும் பார்க்கும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது இந்த 'கோமதி' யானை.

இதையும் படிங்க: 'அடேய் ஓபன் பண்ணுங்கடா' - ஒரு கேட்டை "தூக்கி" மற்றொரு கேட்டை "மிதித்து" வீரநடைப் போட்ட யானை!

Intro:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானை முகாமில் ஃபுட்பால் விளையாடுவதும் மவுத் ஆர்கன் வாசிப்பது என
படு சுட்டியாக வலம் வரும் கோமதி யானை

Body:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத் துறை சார்பில் கோவில் யானைகள் மற்றும் மடத்தில் உள்ள யானைகளுக்கான 12வது புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்றுள்ளன ஆண்டுக்கு ஒருமுறை முகாமில் பங்கேற்கும் யானைகள் தங்களுடைய தோழிகளை பார்த்து உற்சாகம் அடைந்துள்ளன. முகாமில் பங்கேற்று உள்ள யானைகள் சிலம்பு சுற்றுவது மவுத் ஆர்கன் வாசிப்பது என பல்வேறு செயல்களை செய்து வருகிறது. இதில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் யானை கோமதி முகாமுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது 25 வயதான கோமதி புட்பால் விளையாடுகிறது மவுத் ஆர்கன் வாசிப்பது என படு சூட்டி தனது உடன் இருப்பதும் நடை பாவனை பழக்கம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது இதுகுறித்து கோமதி யானையின் சனல் குமார் கூறுகையில் இந்த கோமதி யானை ஊர் மக்கள் அனைவராலும் நடை அழகி என அன்பாக அழைப்பார்கள் தானாகவே தகரத் தகரத்தை மிதித்து சத்தம் எழுப்புவதும் மவுத் ஆர்கன் வாசிப்பது ஃபுட்பால் விளையாடுவது போன்றவற்றை இயல்பாக கற்றுக்கொண்டது இதுவரை யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை மேலும் கோமதி யானையின் தலைமுடி மிகவும் நீளமாக இருப்பதால் பொது மக்களை எளிதில் கவர்ந்து விடும் என தெரிவித்தார். இந்த கோமதி யானை காட்டுப்யானைகளை விரட்டுவதில் பிரபலமான கும்கி யானை கலீமின் மகள் ஆகும் 1994 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் டாப் ஸ்லிப் யானைகள் முகாமில் பிறந்த கோமதி யானை அப்பாவை போன்று சூட்டி தனத்திலும், அன்பிலும் சிறு குழந்தையாக வளர்ந்து வருகிறது 1996 ஆம் ஆண்டு சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோமதி யானையை கடந்த 15 வருடமாக பர்சனல் குமார் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.