ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தை - கோவையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

கோவை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அன்னூர் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

அதிகரித்த ஆடுகள் விற்பனை!
author img

By

Published : Oct 19, 2019, 11:43 AM IST

கோவை மாவட்டம் அன்னூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். புரட்டாசி மாதம் காரணமாக, கடந்த சில நாட்களாக ஆடு, கோழி விற்பனை குறைந்திருந்தது. தற்போது புரட்டாசி முடிந்த நிலையில், அசைவ உணவு மீது ஆர்வம்காட்டி வருகின்றனர்.

மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, ஆடு விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி அன்னூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையிலிருந்தே விறுவிறுப்பாக வியாபாரம் நடந்து வரும் இந்தச் சந்தையில் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடக மாநலத்தில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரபட்டுள்ளன.

அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை

ஆடுகள் ரூபாய் 5 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது. ஆடுகள் குறைவாகவே சந்தைக்கு வந்துகொண்டிருந்தது. தற்போது ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நல்ல விலை கிடைக்கிறது என தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

Intro:புரட்டாசி மாதம் முடிந்ததை அடுத்து அன்னூர் ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகமானதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி.Body:

கோவைமாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி அதிக அளவில் கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கொண்ட பகுதி. இங்கு கால்நடை வளர்ப்பு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது. வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகள் வளர்ப்பு என்பது இந்த பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால் அவைகளை சந்தைப்படுத்தும் ஆட்டு சந்தை வாரந்தோறும் அன்னூரில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் காரணமாக ஆட்டு சந்தையில் குறைவான வரத்து இருந்து வந்தது.இதனையடுத்து வியாழக்கிழமை புரட்டாசி மாதம் முடிவடைந்ததை அடுத்து அன்னூர் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே கூடிய இந்த ஆட்டு சந்தைக்கு அன்னூர்,புளியம்பட்டி, மற்றும் கர்நாடகா மாநலங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரபட்டு வியாபாரமானது நடைபெற்றது. தலையில் அதீத முறுக்கு கொண்ட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. ஜந்தாயிரம் ரூபாயில் துவங்கி அதிகபட்சமாக 35,000 வரை ஒரு ஆடு விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இந்த சந்தையில் கோவை,திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் வாங்கி சென்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது அதனால் ஆடுகள் குறைவாகவே சந்தைக்கு வந்துகொண்டிருந்தது.தற்போது மாதம் முடிந்துவிட்டதால் ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நல்ல விலை கிடைத்ததாக தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.