ETV Bharat / state

பேய் நடமாட்ட எதிரொலி... விடிய விடிய யாகம் நடத்திய மந்திராவதிகள் - ghost videos

கோவை: சோமனூர் அருகே பேய் பயத்தால் ஊரைச் சுற்றிலும் திரிசூலம் வைத்து, கேரளா மந்திரவாதிகளை அழைத்து வந்து கிராம மக்கள் பூஜை செய்தனர்.

ghost villege
author img

By

Published : Oct 11, 2019, 3:24 PM IST

கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள சுப்பராயன்புதூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இக்கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக பேய் நடமாடுவதாக ஊர் மக்களிடையே தகவல் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊர்மக்கள் ஒன்றிணைந்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அக்கூட்டத்தில் பேயை விரட்ட கேரளாவிலிருந்து மந்திரவாதியை வரவழைத்து, பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்காக ஒவ்வொரு வீட்டின் சார்பில் ஆயிரம் ரூபாய் வரி வசூலும் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி மாலை கேரளாவிலிருந்து வந்த ஐந்து மந்திரவாதிகள் சுப்பராயன்புதூருக்கு வந்துள்ளனர். ஐந்தாம் தேதி இரவு எட்டு மணிக்கு தொடங்கிய சிறப்புப் பூஜையும் யாகமும் ஆறாம் தேதி இரவு எட்டு மணி வரை நடந்துள்ளது. இது குறித்த தகவல் அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதால், அக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சுப்பராயன்புதூர் சுற்றிலும் திரிசூலம் நடப்பட்டு, அதில் எலுமிச்சம் பழங்கள் குத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரைச் சுற்றிலும் திரிசூலம் நட்டு வைத்திருக்கும் கிராம மக்கள்

தீய சக்திகள் ஊருக்குள் வராமலிருக்க இந்தத் திரிசூலத்தை வைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுப்பராயன்புதூர் பகுதி வழியாக செல்லக்கூடிய மக்களு அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”தங்கள் பகுதியில் பேயை விரட்ட எந்தவொரு பூஜையும் நடத்தப்படவில்லை எனவும், வழக்கமான பூஜையே நடத்தப்பட்டதாகவும் வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது” என்றும் தெரிவித்தனர்.

Intro:கோவை அருகே பேய் பயத்தால் ஊரைச் சுற்றிலும் திரிசூலம் வைத்து கேரளா மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜை செய்த கிராம மக்கள்.

Body:கோவை மாவட்டம் சோமனூர் அடுத்துள்ள சுப்பராயன்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது இந்நிலையில் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக பேய் நடமாடுவதாக ஊர் மக்களிடையே தகவல் பரவியதாக கூறப்படுகிறது இதனை எடுத்து ஊர்மக்கள் ஒன்றிணைந்து கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் கூட்டத்தில் பேயை விரட்ட கேரளாவிலிருந்து மந்திரவாதியை வரவழைத்து பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது மேலும் இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து கடந்த 5ஆம் தேதி மாலை கேரளாவிலிருந்து 5 மந்திரவாதிகள் சுப்பராயன் புத்தூருக்கு வந்துள்ளனர் ஐந்தாம் தேதி இரவு 8 மணிக்கு துவங்கிய சிறப்பு பூஜை மற்றும் யாகம் ஆறாம் தேதி இரவு 8 மணி வரை நடந்துள்ளது. இது குறித்த தகவல் அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதால் அக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் சுப்பராயன் புதூர் சுற்றிலும் திரிசூலம் நடப்பட்டு அதில் எலுமிச்சம் பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. தீய சக்திகள் ஊருக்குள் வராமல் இருக்க இந்த திரிசூலத்தை வைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுப்பராயன்புதூர் பகுதி வழியாக செல்லக்கூடிய மக்கள் பீதி அடைந்துள்ளனர் இதுகுறித்து சுப்பராயன் புதூர் கிராம மக்கள் கூறுகையில் தங்கள் பகுதியில் பேயை விரட்ட எந்தவொரு பூஜையும் நடத்தப்படவில்லை,சாதாரணமாக தான் பூஜைகள் நடத்தப்பட்டது.வேண்டும் என்றே தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.