கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் மடத்துகுளம், வால்பாறை, உடுமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலிருந்து 5000த்துக்கு மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
தற்போது நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறையளிக்கப்பட்டும், சுற்றுலா தளங்கள், திரையரங்குகள், கோயில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களும் மூடப்பட்டும் உள்ளன.
இதையடுத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மன்றத்தின் சார்பில், நோயாளிகள் நலன் கருதியும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும், 1000 முகக் கவசங்களை கோவை மத்திய கூட்றவு வங்கி சங்க தலைவர் கிருஷ்ண குமார் வழங்கினார். மேலும் ரூ.30,000 மதிப்பிலான முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா சூழல்: தொடங்கும் முன்னே முடிந்த ஊராட்சி ஒன்றியக் கூட்டம்