கோவை பெரிய தடாகம் பகுதியில் கடந்த 15ஆம் தேதி வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறந்த நிலையில் ஆண் யானையின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் யானையின் உடலில் இருந்து வலது தந்தம் திருடப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தந்தம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே யானை தந்தம் மாயமான வழக்கில் 15 வயது, 12 வயது, 11 வயது உடைய மூன்று சிறுவர்களுக்கு கோவை வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
3 பேரும் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களுக்குத் தெரிந்த விவரங்களையும், தகவல்களையும் தெரிவிக்குமாறு வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் மூன்று சிறுவர்களுக்கு வனத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டா கத்தியை சாலையில் உரசியபடி செல்லும் மாணவர்கள் - வைரல் வீடியோ