ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: பாப்பட்டான் குழல் திருவிழா! - Coimbatore District News

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் பாப்பட்டான் குழல் வைத்து ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாப்பட்டான் குழல்
பாப்பட்டான் குழல்
author img

By

Published : Aug 2, 2020, 4:06 PM IST

இந்தியாவிலேயே பாப்பட்டான் குழல் பாவிக்கும் ஒரே வட்டாரம் பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரம் தான். அதுவும் ஆடிப்பெருக்கு காலத்தில் மட்டுமே காணப்படும்.

ஆடிப்பெருக்கு காலத்தில் பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய சிறு காயானது ஆனைமலை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும். அந்த காய் நுழையும் வகையில் மரத்துண்டில் அதனை துளையிடுவர். மேலும் அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார் செய்வர். பின்னர், துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைத்து, வண்ணத்தாள்களால் அலங்கரித்து பாப்பட்டான் குழலை தயார் செய்வர்.

ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து மரத்தண்டு துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும். மேலும் கூம்பு வடிவமானது அவ்வொலியைப் பெரிதுபடுத்தும். அது பொட்டுப்பட்டாசு வெடிப்பது போன்று கேட்கும்.

இந்த பாப்பட்டான் குழலை சிறுவர், சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் வாங்கி விளையாடுவர். ஆனைமலை வட்டாரத்தில் மட்டுமே இந்த பாரம்பரிய திருவிழா இன்னும் அழியாமல், பெரியோர்களால் நடத்தப்பட்டு வருவது மிகவும் பெருமைக்குரியது. குறிப்பாக இத்திருவிழாவானது ஆடிப்பெருக்கில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க: கரோனா நெருக்கடி... களையிழந்த ஆடிப்பெருக்கு: வெறிச்சோடிய காவிரி கரையோரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.