ETV Bharat / state

உணவுப் பாதுகாப்பு சான்று பெற வேண்டுமா.. இனி ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்! - food certificate renewal

உணவுப் பாதுகாப்பு மற்றும் உரிமம் மற்றும் பதிவு சான்று புதுப்பிக்க வணிகர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

food-safety-certificate-can-now-be-applied-online-district-collector-notification
உணவுப் பாதுகாப்பு சான்று இனி ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:15 PM IST

கோயம்புத்தூர்: உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று புதுப்பிப்பதற்காக ஆன்லைன் மூலமாகவும், அல்லது Mitra என்ற பொது சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் நடைமுறையை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி உரிமம் (License) பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள், முதல் கட்டமாக ரூபாய்.1000/- மட்டும் விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.

அத்தகைய ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு பின் அங்கீகரிக்கப்பட்டால், வணிகர்கள் தங்கள் உரிமத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி தவறாக இருப்பின், உணவு பாதுகாப்புத் துறையின் FoSCnS இணைய தளத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்த இணைய தள முகவரியில் சென்று சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர் FSSAI-ஆல் அங்கீகரிக்கபட்ட விண்னாப்பத்திற்கு உணவு வணிகர்கள் மீதி தொகையினை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்களது விண்ணப்பம் தானாகவே ரத்தாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நடைமுறையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் புதுப்பிக்க நாள் ஒன்றுக்கு ரூ.100/- என அபராதம் இதுவரை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய நடைமுறையில் அபராதம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது உரிமம் (License) புதுப்பிக்க ஓராண்டுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலும். (Registration Certificate) ஆண்டு ஒன்றுக்கு ரூ.100/- என ஐந்தாண்டு வரையில் ரூ.500/- வரை செலுத்தி தங்களாகவே ஆன்லைன் மூலம் மேற்கூறிய முறையில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை: FSSAI என ஆல் அங்கீகரிக்கப்பட்ட https://mitra.fssai.gov.in என்ற இணையதளத்தில் மூலமாகவும் கோவை மாவட்டத்தின் உள்ள mitra சேவை மையங்களின் தொடர்பு கொண்டு உரிமம் மற்றும் பதிவு சான்று விபரத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகஅறிந்தால் 0422-2220922 என்ற எண்ணிற்கும், 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகாரினைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்ர்டுள்ளது.

வணிகர்களுக்கு வேண்டுகோள்:- தீபாவனி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் என சிலர் கூறி இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்களிடம் கள ஆய்வு என்ற பெயரில் பயமுறுத்தி பணம் பறிப்பதாக சில தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் என கூறி கள ஆய்வு மேற்கொள்ள வந்தால் அவரிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கான அடையாள அட்டை கேட்டு சரிபார்க்கவும், மேலும் அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகம் .0422-2220922 மற்றும் 93616 38703 என்ற அலை பேசி எண்ணிற்கும், அல்லது ஊழல் தடுப்பு துறையின் 0422-2449550 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.