திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜெ. அன்பழகன் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வடகோவைப் பகுதி திமுக அலுவலகத்தில் அன்பழகன் படத்திற்கு சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கட்சி அலுவலகத்தில் உள்ள திமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதுகுறித்து சிங்காநல்லூர் எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், மறைந்த அன்பழகனின் நினைவு என்றும் தங்களின் மனங்களில் நீங்காத வடுவாக இருக்கும் என வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெ. அன்பழகன் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல்