கோயம்புத்தூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (ஜன.15) கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வியாபாரம் களைகட்டத் துவங்கியுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பண்டிகைக்காக பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
பூக்களின் விலை:
பூக்கள் | கடந்தவாரம் பூக்களின் விலை | தற்போது பூக்களின் விலை |
மல்லிகைப் பூ | ரூ.800 | ரூ.2200 |
முல்லைப் பூ | ரூ.600 | ரூ.1200 |
ஜாதிப் பூ | ரூ.400 | ரூ.800 |
செவ்வந்தி | ரூ.80 | ரூ.140 |
அரளி | ரூ.160 | ரூ. 280 |
ரோஸ் | ரூ.120 | ரூ.200 |
செண்டுமல்லி | ரூ.40 | ரூ.80 |
தாமரை | ரூ.10 | ரூ.20 |
சம்மங்கி | ரூ.40 | ரூ.180 |
துளசி | ரூ.20 | ரூ.50 |
பூ விலை பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பூக்களை குறைவாகவும், மல்லிகைப் பூ வாங்குவதை தவிர்த்து, வேறு பூக்களையும் வாங்கிச் செல்கின்றனர்.
காய்கறி விலை உயர்வு: பொங்கலை முன்னிட்டு, கோவை உக்கடம் ராமர் கோவில் வீதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான சில்லறை காய்கறி மார்க்கெட்டில், இன்று காலை ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.
காய்கறி | கடந்தவாரம் காய்கறி விலை | தற்போது காய்கறி விலை |
கேரட் | ரூ.40 | ரூ.50 |
பீன்ஸ் | ரூ.50 | ரூ.60 |
முருங்கக்காய் | ரூ.120 | ரூ.140 |
இஞ்சி | ரூ.100 | ரூ.120 |
பூண்டு | ரூ.250 | ரூ.300 |
அவரைக்காய் | ரூ.50 | ரூ.70 |
மொச்சை | ரூ.50 | ரூ.80 |
பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள் பிரதானம் என்பதால், விலை சற்று உயர்வாக இருந்தாலும், பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
காவல்துறை பாதுகாப்பு: பண்டிகையை முன்னிட்டு, பூ மார்க்கெட்டிற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிவதால், காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் நிறுத்தம்? - இருக்கும் சலுகைகளை திமுக பறிப்பதாக ஓபிஎஸ் கண்டனம்!