கோயம்புத்தூர்: பெரியதடாகம் பகுதியில் நேற்றைய முன் தினம் (பிப்ரவரி 6) காலை பெண் யானை ஒன்று மயங்கிய நிலையில் படுத்திருந்தது.
இது குறித்து வனத் துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்று முன் தினத்திலிருந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் யானையின் ரத்தம் மற்றும் சாணத்தை ஆய்வுசெய்தனர். ஆனால் அதில் அனைத்தும் சரியாக உள்ளதாகத் தெரிவித்த நிலையில் நீர் சத்துக்காக குளுக்கோஸ், வெல்லம் கலந்த சூரண குடிநீர் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வன அலுவலருக்கும் மாவட்ட கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஐஐடி வளாகத்திற்குள் மான்கள் இறப்பு விவகாரம்: ஐஐடி விளக்கம்