ETV Bharat / state

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை மீட்டு தரக்கோரி மனு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது மகளை மீட்டுத் தரக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவிகள்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவிகள்
author img

By

Published : Feb 28, 2022, 4:55 PM IST

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (பிப். 28) மனு ஒன்றை அளித்தார். அதில், 'உக்ரைனிலுள்ள எனது மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது நண்பர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செல்வராஜ் கூறுகையில், 'எனது மகள் ஐஸ்வர்யா உக்ரைனில் தெற்கு பகுதியிலுள்ள மெட்ரோ பிளாக்ஸி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

அந்தப்பகுதி உக்ரைன் தலைநகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேற்று (பிப். 27) எனது மகளுடன் பேசும்போது குண்டு வெடித்தது. வசதி இல்லாததால் குறைந்த செலவில் படிக்க விருப்பப்பட்டு அங்கு படிக்க அனுப்பினோம்.

அங்குள்ளவர்கள் பத்திரமாக அழைத்து வர வேண்டும். அங்கிருந்து வருபவர்களுக்கு இங்கு மருத்துவம் படிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனது மகள் 4ஆம் ஆண்டு முடித்துள்ளார். சிரமத்திற்கு இடையே படிக்க வைக்கிறோம். எனது மகளின் மருத்துவக் கனவை நினைவாக்க வேண்டும்’ என்றார்.

இதனிடையே உக்ரைனிலுள்ள தொண்டாமுத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐஸ்வர்யா, திருப்பூர், ஈரோடு, தேனி, பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, 'நாங்கள் வசிக்கும் பகுதியில் தற்போது போர் தொடங்கியுள்ளது.

குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரியில் இருந்து தலைநகர் அல்லது வேறு இடத்திற்குச் செல்ல முடியாத வகையில் பாலங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளன. எங்களை எப்படியாவது மீட்க வேண்டும்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவிகள்

உணவுப்பொருள்கள் இரண்டு நாள்களுக்கு மட்டுமே கையிருப்பில் உள்ளது. எங்கு திரும்பினாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய தூதரகத்தில் இருந்து இதுவரை யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை' என உருக்கமாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.