தமிழ்நாடு முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மீன்வளத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள மொத்த மீன் விற்பனை மார்க்கெட்டில், மீன்வளத் துறை, உணவுத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஒரு லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அனைத்து மீன் விற்பனை நிலையங்களின் தரம் குறித்தும், பார்மலின் என்னும் ரசாயனம் ஏதேனும் மீன்களின் மேல் தடவி விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
ரசாயனம் தடவிய மீன்கள் ஏதும் அங்கு விற்கப்படவில்லை என்பது உறுதியானது. ஆனால், 500 கிலோ கெட்டுப்போன மீன்கள் மட்டும் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டு அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உதகை மீன் கடைகளில் திடீர் ஆய்வு!