ETV Bharat / state

கோவை சாலை விபத்து: இருவர் பலி

கோவை: புளியம்பட்டி அருகே லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது தந்தை, குழந்தை காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சாலை விபத்து: ஒருவர் படுகாயம்! இருவர் பலி!
author img

By

Published : May 10, 2019, 8:50 AM IST

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவரது மனைவி யசோதா (32). யசோதா புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள பாச்சாமல்லனூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை யசோதா, அவரது தந்தை பழனிச்சாமி, ஒன்றரை வயது மகள் கீர்த்தி ஆகிய மூவரும் புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்புவதற்காக, கோவை-சத்தியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நம்பியூர் கார்னர் அருகே சென்றபோது கோவையிலிருந்து கர்நாடகா நோக்கிச் சென்ற லாரி அவர்களின் மீது மோதியதில் யசோதாவிற்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் காயம்பட்ட யசோதா, பழனிச்சாமி, கீர்த்தி ஆகிய மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தபோதும் யசோதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை கீர்த்தி சிகிச்சை பெற்றுவருகிறார். பழனிச்சாமி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

புஞ்சைபுளியம்பட்டியில் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  தந்தை குழந்தை காயம்: 

சிகிச்சை பலனின்றி தாய் பலி

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_04_09_ACCIDENT_VIS_TN10009

. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டிபாளையம்  கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்  (30). இவரது மனைவி யசோதா (32). யசோதா புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள பாச்சாமல்லனூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை யசோதா தனது தந்தை பழனிச்சாமி மற்றும்  ஒன்றரை வயது மகள் கீர்த்தி ஆகிய 3 பேரும் பாச்சாமல்லனூரில் இருந்து புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டை கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து திரும்பி புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு பாச்சாமல்லனூர் செல்வதற்காக கோவை -சத்தியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். நம்பியூர் கார்னர் அருகே சென்றபோது கோவையிலிருந்து கர்நாடகா நோக்கி சென்ற லாரி மொபட் மீது மோதியதில் யசோதா அதற்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயம்பட்ட யசோதா, பழனிச்சாமி, கீர்த்தி ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த போது யசோதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை கீர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். பழனிச்சாமிக்கு லேசான காயம்  ஏற்பட்டது. விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.