கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு இரண்டு இடங்களில் ஈமு கோழியில் முதலீடு செய்யக்கோரி விளம்பரம் செய்து 40 பேரிடம் 58.51 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (49), கார்த்திகேயன் (51) ஆகிய இருவர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவில் இரண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது கோவை முதலீட்டாளர்கள் நலப்பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செப்.23) வழங்கப்பட்டது. அதில் குமார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் குற்றவாளிகள் என்றும்; அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, ரூபாய் 55 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு