கோவை மாவட்டம் வால்பாறை அருகில் சோலையார் அணை உள்ளது. அணையைச் சுற்றி வனப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்நிலையில், கேரளா சாலக்குடி வன பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானை கூட்டங்கள், கடந்த இரண்டு மாதங்களாக வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.
அந்த வகையில், சோலையார் அணைக்கு அருகிலுள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை எஸ்டேட் பகுதியில் உலா வந்தது. பின்னர், அணையின் கரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல யானை நீச்சல் அடித்து சென்றது. அது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.