கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பாலமலையிலிருந்து குஞ்சூர்பதி நோக்கி வனத் துறையினரின் அனுமதி பெறாமல் எட்டு பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த ஆண் யானை அவர்களைத் துரத்தியுள்ளது.
அதில் பெண்மணி ஒருவர் யானையிடம் சிக்கி, அதனால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர், காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்விற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் புவனேஸ்வரி என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனுமதிபெறாமல் டிரக்கிங் செல்பவர்களைக் கண்டுகொள்ளாமல் வனத் துறையினர் அலட்சியம்காட்டுவதாலே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறதென அப்பகுதி மக்கள் குறைகூறுகின்றனர்.
இதையும் படிங்க: காரை துரத்திய காட்டு யானை - அலறிய பயணிகள்!