ETV Bharat / state

தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடியவர் கைது! - பாபு ஜோஸ் கைது

கோவை: மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் தந்தத்திற்காக ஆண் யானைகளை வேட்டையாடி மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாபுஜோஸ் கைது செய்யப்பட்டார்.

BABUHJOSH
author img

By

Published : Sep 22, 2019, 12:10 PM IST

2011ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மூன்று ஆண் யானை, சிறுமுகை வனப்பகுதியில் ஒரு ஆண் யானை என மொத்தம் நான்கு யானைகள் அடையாளம் தெரியாத நபர்களால் வேட்டையாடப்பட்டு அவற்றின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. அதே பாணியில், வருசநாடு வனப்பகுதியில் 3, சீகூர், வல்லக்கடவு ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என்ற கணக்கில் மூன்று யானைகள் கொன்று குவிக்கப்பட்டன.

சங்கிலி போல் தொடர்ந்த இந்தச் சம்பவங்கள் 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கியது. தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடி கொலை செய்யும் நபர்களைத் தேடி கண்டுபிடிப்பதில் வனத் துறையினருக்கு சவாலாகவே இருந்தது. இந்நிலையில், சீகூர் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குபேந்திரன், சிங்கம் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்தனர்.

இந்தக் கூட்டத்தின் தலைவனான பாபுஜோஸ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தச் சூழலில் சிறுமுகை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இது குறித்து வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத் துறையினர் நீதிமன்ற வளாகத்தில் மறைந்து நின்றனர்.

அப்போது டீ கடைக்கு வந்த பாபுஜோசுவை வனத் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறையினர் பாபுஜோஸ் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு9, 39, 52, 51 (1) சட்டப்படியும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 21 டி.எச்.(2) வனத்திற்குள் அத்துமீறி நுழைதல், வேட்டையாடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட பாபுஜோஸ் மேட்டுப்பாளையம் ஜுடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:மேட்டுப்பாளையம்,சிறுமுகை
வனப்பகுதிகளில் தந்தத்திற்காக
ஆண் யானைகளை வேட்டையாடி
தந்தங்களை விற்பனை செய்த
வியாபாரி பாபுஜோஸ் கைது.
மேட்டுப்பாளையம் குற்றவழக்கில்
3ஆண்டுகள் தலைமறைவாக
இருந்தவரை வனத்துறையினர்
கைது செய்தனர்.
Body:கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட கோவை,மதுக்கரை,போளூவாம்பட்டி,பெரியநாயக்கன்பாளையம்,
காரமடை,மேட்டுப்பாளையம்,
சிறுமுகை ஆகிய வனச்சரகங்களுக்குட்பட்ட அடர்ந்த
வனப்பகுதிகளில் யானை,
காட்டெருமை, வரை யாடுபுள்ளிமான்,கரடி,சிறுத்தை,செந்நாய் மற்றும் பிறவன விலங்குகள்
உள்ளன.இதில் மேற்கு தொடர்ச்சி மலை பச்சைப்பசேல்
என்று காணப்படும் அடிவாரப்பகுதி
மற்றும் என்றும் வற்றாத ஜீவநதியாம் பவானி ஆறு பாய்ந்தோடிக்கொண்டிருப்பதால்
மற்ற வனச்சரகங்களை விட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்ளில் காட்டு யானைகள்
நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.ஆண் காட்டு யானைகளை வேட்டையாடி
தந்தங்களை வெட்டி விற்பனை
செய்து வந்த கும்பலுக்கு மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிகளில் .தங்கள் கைவரிசையை காட்டத்தொடங்கினார்கள்.
இந்தநிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்
3 ஆண் யானைகளும்,சிறுமுகை
வனப்பகுதியில் 1 ஆண் யானையும் மொத்தம் 4 யானைகள்
மர்ம கும்பலால்
வேட்டையாடப்பட்டு தந்தங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து
வந்தது.மேலும்சீகூர் வனப்பகுதியில் 1 யானையும், வல்லக்கடவு வனப்பகுதியில் 1
யானையும் வருச நாடு வனப்பகுதியில் 3 யானைகளும்
தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டன.சங்கிலி
போல் இந்த தொடர் சம்பவங்கள்
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே
உலுக்கியது.தமிழக வனத்துறையினருக்கு பெரும்
சவாலாகவும் இருந்தது.அந்தந்த
பகுதிகளுக்குட்பட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு
செய்து வனக்குற்றவாளிகளை தீவிரமாக தேடியும் விசாரித்தும்
வந்தனர்.
இதனைத்தொடர்ந்து சீகூர்
வனப்பகுதியில் கடந்த 2015 ஆம்
ஆண்டு யானைகளை வேட்டையாட முயற்சி
செய்த தேனி வருச நாடு பகுதியைச்சேர்ந்த சிங்கம்(45)
குபேந்திரன்(42) ஆகிய 2 பேரைக்
கைது செய்தனர்.இதில் வனவிலங்குகளை குறி பார்த்து
சுடுவதில் சிங்கம் கைதேர்ந்தவன்.இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடந்த
2016 ஆம் ஆண்டு கல்லார் வனப்பகுதியில் வேட்டையாடிய
யானைகள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை
அடுத்து அந்த இடங்கள் தோண்டப்
பட்டு எலும்புக்கூடுகள் பிரேத
பரிசோதனை செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்," இடுக்கி மாவட்டம் உடுப்பஞ்சோலை தாலுகா,கொச்சேரி அஞ்சல்,மந்திப்
பாறையைச்சேர்ந்த செட்டியார்
என்கிற பாபுஜோஸ்(40) என்பவர்
தான் தந்தத்திற்காக யானைகளை
வேட்டையாட தூண்டியதாகவும்,
வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளை
பாபு ஜோஸிடம் கூறியதும் அவர்
எங்களை துப்பாக்கி அரிவாள்
மற்றும் தேவையான பொருள்களுடன்ஊரிலிருந்து
எங்களை கூட்டி வந்து சம்பந்தப்பட்ட வனப்பகுதியில்
இறக்கி விட்டு விட்டு சென்று
விடுவார். ஒரு சில நேரங்களில்
உள்ளூரில் உள்ள லாட்ஜுகளில்
தங்கி விடுவார்.நாங்கள் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடி தந்தங்களை வெட்டிய
பின்னர் அவருக்கு தகவல் கொடுத்தால் உடனே அவர் வந்து
எங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக்கொடுத்து விட்டு
தந்தங்களை திருவனந்தபுரம்
கொண்டு சென்று விற்பனை செய்து விடுவார்.
என்று கூறியதாகத்தெரிகிறது.
இதனையடுத்து சிங்கம்,குபேந்திரன் ஆகிய 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.யானைகளை
சுட்டு வேட்டையாடத்தூண்டியதாக
பாபுஜோஸ் மீது சிறுமுகை வனத்துறையினரும் மேட்டுப்பாளையம் வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வந்தனர்.இதில் சுதாரித்துக்
கொண்ட பாபுஜோஸ் சென்னை
உயர்நீதி மன்றத்தில் சிறுமுகை
வழக்கிற்கு முன்ஜாமீன் பெற்று
விட்டார்.ஆனால் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தகுந்த ஆவணங்களை அளித்ததின் பேரில் மேட்டுப்பாளையம் வழக்கிற்கு அவரால் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற
முடியவில்லை.இதனால் கடந்த 3
வருடங்களாக மேட்டுப்பாளையம்
வழக்கு விசாரணைக்கு வராமல்
தலைமறைவாக இருந்ததாகத்
தெரிகிறது.
இந்தநிலையில் பாபுஜோஸ்
சிறுமுகை வழக்கு விசாரணைக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நீதி
மன்றத்திற்கு வந்திருந்தார்.இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்
துறையினருக்கு ரகசிய தகவல்
கிடைத்தது.தகவலையடுத்து மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் உத்திரவின் பேரில்
மேட்டுப்பாளையம்வனச்சரக
அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர்
நீதி மன்ற வளாகம் சென்று
ஆங்காங்கே மறைந்து நின்றனர்.
பகல் 2.00 மணிக்கு பாபுஜோஸ்
டீ கடைக்கு வந்த போது வனத்துறையினர் அவரை சுற்றி
வளைத்து கைது செய்தனர். கல்லாறு வனப்பகுதியில் வேட்டையாடிய யானைகள் புதைக்கப்பட்ட இடத்தை வனத்துறையினருக்கு அடையாளம் காட்டினார்.
அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் பாபுஜோஸ்
மீது வன உயிரின பாதுகாப்புச்சட்டம் 1972 பிரிவு9, 39,
52,மற்றும்51 (1) சட்டப்படியும்
தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு
21 டி.எச்.(2) வனத்திற்குள் அத்துமீறி நுழைதல்,வேட்டையாடுதல் ஆகிய
பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கைது
செய்யப்பட்ட பாபுஜோஸை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் ஜுடிசியல்
கோர்ட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்
படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சரவணபாபு அவரை 15 நாள்
காவலில் வைக்க உத்திரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து கோவை
மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.