ETV Bharat / state

தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த காட்டுயானை - பொதுமக்கள் பீதி

கோவை: தடாகம் அருகே தாளியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

elephant
elephant
author img

By

Published : Dec 2, 2019, 8:01 AM IST

கோவை மாவட்டம் தடாகத்தை அடுத்த தாளியூர் கிராமத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒற்றை காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.

தண்ணீர் தேடி ஊருக்குள் வலம்வந்த அந்த காட்டு யானை , நாகராஜ் என்பவர் வீட்டின் முன்பு டிரம்மில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்தது.

தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில் அருகில் வைக்கபட்டிருந்த பாத்திரங்களிலும் துதிக்கை விட்டு உறிஞ்சிப்பார்த்த யானை, பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றது.

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினருடன் சேர்ந்து கிராமமக்கள் யானையை காட்டுக்குள் விரட்டினர்.

இதையும் படிங்க...

கோவையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்...

Intro:கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள தாளியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Body:கோவை மாவட்டம் தடாகத்தை அடுத்த தாளியூர் என்ற கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒற்றை காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது. தண்ணீர் தேடி வந்த அந்த காட்டு யானை , நாகராஜ் என்பவர் வீட்டின் முன்பு டிரம்மில் வைக்கப்பட்டிருந்த இருந்த சிறிதளவு தண்ணீரை குடித்தது. தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில் அருகில் இருந்த மற்ற பாத்திரங்களை துதிக்கையால் தேடி பார்த்த காட்டுயானை, தண்ணீர் இல்லாததால் அங்கிருந்து நகர துவங்கியது . யானை ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்களும் , வனத்துறையினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.