கோவை நஞ்சப்பா சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து அதிகப்படியான நீர் வெளியேறியது. வெளியேறிய நீரானது அவினாசி மேம்பாலம் அடியில் புகுந்ததால் மேம்பாலத்திற்கு அடியில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் வாகனங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நீர் வெளியேறியது. மாநகராட்சி ஊழியர்கள் உடைந்த குடிநீர் குழாயினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவினாசி மேம்பாலத்திற்கு கீழ் தேங்கிய நீரை பம்ப் செட் மூலம் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வேலைக்கு செல்லும் பணியாளர்கள் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க:
சிறப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!