ETV Bharat / state

மலர் தூவலை எதிர்நோக்கி காத்திருந்த மருத்துவர்கள் ஏமாற்றம் - Doctors expected army's flower shower at Coimbatore got disappointed

கோவை: இ.எஸ்.ஐ மருத்துவமனை மீது வானூர்திகள் மூலம் மலர் தூவப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அம்மருத்துவமனை மருத்துவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மலர் தூவலை எதிர்நோக்கி காத்திருந்த மருத்துவர்கள் ஏமாற்றம்

author img

By

Published : May 4, 2020, 5:27 PM IST

கரோனாவை எதிர்த்து தங்கள் உயிரைப் பணையம் வைத்து சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்களை கௌரவப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளின் மீது மலர்தூவி மரியாதை செலுத்த முப்படைகள் சார்பில் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலர் தூவலை எதிர்நோக்கி காத்திருந்த மருத்துவர்கள் ஏமாற்றம்
மலர் தூவலை எதிர்நோக்கி காத்திருந்த மருத்துவர்கள் ஏமாற்றம்

இதற்கான அறிவிப்பை முப்படைத் தளபதி பிபின் ராவத் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி மாநிலத்தின் தலைநகரில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மீதும் மலர் தூவப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மீதும் மலர் தூவப்படும் என்று சில தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனை நம்பி அம்மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் மலர் தூவுதலை எதிர்பார்த்து குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் காத்திருந்தனர். ஆனால் விமானம் இறுதி வரை வராததால் மருத்துவர்களும் செவிலியர்களும் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இருப்பினும் இதில் வருத்தபடுவதற்கு எதுவும் இல்லை என்றும் இந்த வைரஸ் தொற்றிக்கு எதிராக போராடுவதே தங்களது கடமை என்றும் மீண்டும் உற்சாகத்துடன் தங்கள் பணிகளை தொடரச் சென்றனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் - டாக்டர். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.