ETV Bharat / state

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்! - திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக்

கோயம்புத்தூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 28, 2020, 5:41 PM IST

கோயம்புத்தூர்: தெற்கு வட்டாட்சியர் அலுவகம் முன்பாக வேளாண் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று (செப்.28) தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன், தொடர்ச்சியாக கோவையிலும் பல்வேறு இடங்களில் திமுக உள்ளிட்ட பல கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டுத்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கூரியதாவது, “மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்க கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தும் கூட தமிழ்நாடு அரசு அதனை எதிர்க்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் எஸ்.ஆர் .பாலசுப்ரமணியம், இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்று எடுத்துக் கூறியும் கூட தமிழ்நாடு அரசு அதை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி-யை தமிழ்நாடு எதிர்க்கவில்லை. ஆனால், தற்போது தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி-யை வாங்க தமிழ்நாடு அரசு திண்டாடி வருகிறது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் தங்களின் தனிப்பட்ட பிரச்னைக்காக மொத்த தமிழ்நாட்டையும் காவு கொடுக்க வேண்டாம். மத்திய அரசு கொண்டுவந்திருக்கிற இந்த சட்டங்களையெள்ளாம் திரும்பப் பெறவில்லை என்றால் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற ஒரு போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் கணுவாய் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் ஆர்.கிருஷ்ணன் கலந்துகொண்டார். 15 மாட்டு வண்டிகளில், மாடுகளின் கொம்புகளுக்கு சிவப்பு, கருப்பு நிற பலூன்களை கட்டி விட்டபடி பலரும் அவருடன் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் வந்த திமுக மாவட்ட கழக பொறுப்பாளர்

இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மீது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.