ETV Bharat / state

‘இது என்னோட மண்.. ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ - கோவையில் திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு! - recent news tamil

கோவையில் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வாசகத்துடன் திமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கோவை
coimbatore
author img

By

Published : Jul 28, 2023, 12:49 PM IST

கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோயம்புத்தூர்: கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வசனம் இடம் பெற்று உள்ளது.

அதுமட்டுமின்றி காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பதுபோல் போஸ்டரில் புகைப்படம் இடம் பெற்று உள்ளது. மேலும், இந்த போஸ்டரில் பெரியார், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவின் ஐநா தூதர் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு!

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணமலை இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை துவங்க உள்ளார். அதற்கான துவக்க விழா இன்று (ஜூலை 28) மாலை 4.30 மணி அளவில் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடைபயணமானது நடைபெற உள்ளது. ஜூலை 29ஆம் தேதி தொடங்கி ஆக்ஸ்ட் 21ஆம் தேதி வரை முதல் கட்ட யாத்திரையாக நடைபெறுகிறது.

அதற்கு பின்பு ஒவ்வொரு கட்டமாக ஐந்து கட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். மேலும், ராமேஸ்வரத்தில் வைத்து இன்று (ஜூலை 28) மாலை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவையில் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என திமுகவினரால் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை தொடங்கி வைக்க அமித்ஷா தமிழகம் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.