தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. சிலர் வேலையிழந்தனர்; சிலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டது. இது தனி மனிதர்களை மட்டுமல்லாது அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட நெருக்கடிதான். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த சபீரும் வேலையிழந்து அன்றாடச் செலவுகளுக்குக்கூட பணமின்றி தவித்துவந்தார். ரயில் நிலையத்தில் தற்காலிக ஊழியராக உணவுப் பொருள்கள், பிஸ்கட் போன்றவற்றை விற்றுவந்த சபீருக்கு பொதுப்போக்குவரத்துத் தடை பேரிடியாக விழுந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சபீர் தனது குடும்பத்தின் ஆதரவைக் கோரியுள்ளார்.
பூ வியாபாரம்
சபீர் கடந்த 3 மாதங்களாகக் கிடைத்த வேலையைச் செய்துவந்தார். இதில், உரிய சம்பளம் ஏதும் கிடைக்காததால், இனி பூ விற்கலாம் என முடிவு செய்தார். நாள்தோறும் பூ மார்க்கெட்டிலிருந்து 10 கிலோ பூக்களை வாங்கிவந்து தன் மனைவியிடம் கொடுப்பார்.
அவர் அதைப் பிரித்து 100 கிராம் அளவில் எடையிட்டு கவர்களில் கட்டிக் கொடுப்பார். சபீர் சாலைகளில் பூ விற்க வருவார். ஆனால், போதுமான அளவில் விற்பனை இல்லை. இதனால் பூ விற்கச் செல்லும்போது அவரது இரண்டு குழந்தைகளான தன்வீர், ஜோயாவை உடன் அழைத்து வரத் தொடங்கினார். தகிக்கும் வெயிலில் கையில் பூ பைகளோடு நிற்கும் தன்வீரும், ஜோயாவும் காண்போர் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றனர்.
குழந்தைகளுக்காக மக்கள் பூக்களை வாங்கிச் செல்லத் தொடங்கினர். ”வெயிலில் குழந்தைகளை நிற்கவைத்து பூ விற்கச் செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. குடும்பச் சூழ்நிலை எங்களை இப்படி சாலையில் நிற்க வைத்துவிட்டது; வேற வழி தெரியவில்லை” என வருந்துகிறார் சபீர்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களின் வழியே கசியவே, இதைக் கண்டு தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் அதிர்ந்து போனார். சற்றும் தாமதிக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தச் சிறார்களின் படிப்பிற்காக பெற்றோருடய வங்கிக் கணக்கில் நிதி திரட்டத் தொடங்கினார்.
தற்போது இந்த நிதி திரட்டும் முயற்சியில் 1 லட்சத்திற்கும் மேலாக நிதி திரண்டுவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வறுமையின் கோரப்பிடியில் சாலையில் பூ விற்கவந்த தன்வீர், ஜோயாவின் கால்கள் இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம்.
-
134) @bramshiv_24
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Deposited Rs.1000 #FeesForFlowerSellingKids
Target achieved 80,000 + 54,500= 1,34,500
Thank you ️
">134) @bramshiv_24
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 25, 2020
Deposited Rs.1000 #FeesForFlowerSellingKids
Target achieved 80,000 + 54,500= 1,34,500
Thank you ️134) @bramshiv_24
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 25, 2020
Deposited Rs.1000 #FeesForFlowerSellingKids
Target achieved 80,000 + 54,500= 1,34,500
Thank you ️
இதையும் படிங்க: வாடகை தரவில்லையென விரட்டப்பட்ட குடும்பத்தை கை கொடுத்து காப்பாற்றிய ஆட்சியர்