ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உள்பட்ட உலாந்தி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் கோடைக்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். இதனால் காட்டு தீ ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் பொள்ளாச்சி கோட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி கோட்டத்தில் தீ தடுப்பு நடவடிக்கையாக மொத்தம் 635 கி.மீ.,க்கு தீத்தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனப் பணியாளர்கள் அனைவருக்கும் தீத் தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடையே தீத் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக அனைத்து வாகன சோதனைச் சாவடிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் வாகனங்களில் வருபவர்களிடம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் தீ ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து தீத் தடுப்பு நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தருமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதில் உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் நவீன், வனவர்கள் நித்யா ஜீவா, இளவரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தனித்து விடப்பட்ட தேமுதிக! நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!