ETV Bharat / state

பயணம் உண்டு, பயம் இல்லை: மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி! - மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி

கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி விளையாட்டுகளுக்கு உடல் குறைபாடு தடை இல்லை என தெரிவித்தார்.

மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி

author img

By

Published : Dec 5, 2022, 12:42 PM IST

கோயம்புத்தூர்: நண்பர்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டால் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் சிலர் பயத்தின் காரணமாக, அந்த எண்ணத்தை தள்ளிவைத்து விடுவார்கள். இப்படி இருக்க எங்களுக்கு பயணம் உண்டு, பயம் இல்லை என்ற தொனியில் மாற்றுத்திறனாளி மாணவி செந்தமிழ் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.

கருமத்தம்பட்டி அருகே உள்ள கே.பி.ஆர் கல்வி குழுமங்கள் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நேற்று (டிச. 4) நடைபெற்றது. 7 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் 8 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் பிரிவுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி

இதில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 5 கிலோ மீட்டர் பிரிவில், செல்லப்பம்பாளையம் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவி செந்தமிழ் ஊன்று கோல் உதவியுடன் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.

தனக்கு இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது ஆசை எனவும் விளையாட்டுகளுக்கு உடல் குறைபாடு தடை இல்லை எனவும் மாற்றுத்திறனாளி மாணவி செந்தமிழ் கூறினார்.

சிறப்பு பிரிவில் பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளின் முடிவில் சென்னை சுங்கத்துறை உதவி ஆணையர் நடராஜன், தடகள போட்டி வீரர் பிரவீன் சித்திரவேல், திரைப்பட நடிகர்கள் ரியோராஜ், பாவ்யா ஆகியோர் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதையும் படிங்க: Karthigai Deepam: அண்ணாமலையார் தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.